மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

