தம்புள்ளை ஆதார மருத்தவமனையில்…. – குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கை சுகாதார சேவை பணிப்பாளருக்கு

261 0

தம்புள்ளை ஆதார மருத்தவமனைக்கு மகப் பேற்றுக்காக செல்லும் தாய்மார்களின் அனுமதியின்றி, அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை அறிக்கை சுகாதார சேவை பணிப்பாளக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

தம்புள்ளை ஆதார மருத்துவமனை பணிப்பாளர் சார்ள்ஸ் நுகேவல இதனைத் தெரிவித்துள்ளார்.

குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் கணவர்மார்களிடம் இது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களும் குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.