ஐந்து தசாப்தங்களிற்கு முன்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிரகன் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

97 0

அவுஸ்திரேலியாவில் ஐந்து தசாப்தங்களிற்கு  முன்னர் காணாமல்போன அழிந்துபோனதாக கருதப்பட்ட டிரகன் விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முற்றாக அழிந்துபோய்விட்டது அல்லது முற்றாக அருகும் நிலையில் உள்ளது என கருதப்பட்ட டிரகனே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1969ம் ஆண்டின் பின்னர் எயர்லஸ் டிரகன் என அழைக்கப்படும் 15 சென்டிமீற்றர் விலங்கினை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னிற்கு மேற்கே உள்ள புல்நிலங்களில் அதிகமாக காணப்பட்ட இந்த வகை விலங்கு வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டதாலும் வேட்டையாடப்பட்டதாலும் அழிந்துவிட்டது என்ற கருத்து காணப்பட்டது.

இந்நிலையில் இந்த வகை விலங்கு இன்னமும் எஞ்சியுள்ளது தெரியவந்துள்ளதாக விக்டோரியாவின் சூழல் விவகாரஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை எங்கே கண்டுபிடித்துள்ளனர் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.

இது அற்புதமான கண்டுபிடிப்பு உலகில் இல்லாமல் போய்விட்டன என கருதப்பட்ட ஒரு இனத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

2017 முதல் விக்டோரியா மிருகக்காட்சி சாலை இந்த வகை டிரகனை தீவிரமாக தேடிவந்துள்ளது.

இந்த வகை விலங்கை கண்டுபிடித்தமை மிகவும் சிறப்பான விடயம் என மிருகக்காட்சிசாலையின் பிரதமநிறைவேற்று அதிகாரிதெரிவித்துள்ளார்.