மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள், இராணுவ ஜாக்கெட் கைப்பற்றப்பட்டன!

164 0

அக்குறணை, துனுவில பிரதேசத்தில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள், 29 கையடக்கத் தொலைபேசிகள், இராணுவ ஜாக்கெட், 2,070 மில்லி கிராம் ஹெரோயின், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள், 7 கத்திகள் மற்றும் 17,040 ரூபா பணத்துடன் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுஜீவ குணதிலக்க தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.