‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை நறுக்கிய ஆசிரியர்கள்

74 0

திருவொற்றியூரில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கோடை விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்டது. விடுமுறையின்போது ஸ்டைலாக தலைமுடிவெட்டி இருந்த மாணவர்கள் பலர் அப்படியே பள்ளிக்கு வந்து இருந்தனர்.

புள்ளிங்கோ ஸ்டைல், டபுள் சைடு கோடு, பாக்சர், மஸ்ரூம் கட்டிங், லைன் கட்டிங், டாப் கட்டிங் உள்ளிட்ட விதவிதமான ஸ்டைலில் அலங்கோலமான தலைமுடி இருந்தது.

இதனை கவனித்த ஆசரியர்கள் புள்ளிங்கோ போல் விதவிதமாக தலைமுடியுடன் வந்த மாணவர்களை அழைத்து சரியான முறையில் முடித்திருத்தம் செய்து வரும்படி கூறி இருந்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் மாணவர்கள் பலர் வித்தியாசமான தலைமுடியுடன் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.