யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் 435 கிராம சேவையாளர்களும் அவசரமாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (23.06.2023) 2 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள நிலமைகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

