தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட கொண்டாட்ட நிகழ்வின் போது, wall of death (மரணக் கிணறு) எனப்படும் விளையாட்டு பொறியின் படியிலிருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்துள்ளது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதும் 11 மாதமுத் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
wall of death இன் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக wall of death இன் பாதுகாப்பு மற்றும் அலங்காரத்திற்காக குழந்தையின் தந்தை வந்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

