பொரளையில் துப்பாக்கிச் சூடு!

152 0

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று (22) காலை வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வீட்டின் வாயிலில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடு பிரபல பாதணிகள் நிறுவனமொன்றின் நிர்வாக பணிப்பாளர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.