மூத்த ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.முக்தார் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சி.சி.டி.வி. காட்சி என்பவற்றுக்கு அமைவாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரின் சகோதரர் ஒருவரே மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை (22) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்த நீதவான், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

