எம்.கியூ 9பீ ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியா

170 0

3 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க வெளிநாட்டு இராணுவ விற்பனை மூலமாகவோ அல்லது இரு நாட்டு அரசாங்க வரியின் மூலமாகவோ எம்.கியூ 9பீ ஆளில்லா விமானங்களை  கொள்வனவு செய்யும் திட்டம் குறித்து பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது கவத்தில் கொள்ளப்படும்.

அமெரிக்காவிடமிருந்து 31 உயர் தரம் கொண்ட ஆளில்லா விமானங்களை  இந்தியா வாங்குவது, தொழில்நுட்பத்தின் ஆரம்ப உறிஞ்சுதலை உள்ளடக்கிய ஒரு கட்டப் பயிற்சியாக இருக்கும். முதல் தொகுதியாக 10 ஆளில்லா விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.

இந்த விமானங்களை இயக்கும் வகையில் முப்படைகளையும் உள்ளடக்கிய சிறப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. சேவை நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு கட்டளை மையங்கள், தெற்கு மற்றும் வடக்கில் எல்லைகளில் இந்த கட்டமைப்புகளை உருவாக்கவும் குறிப்பாக சீனாவுடனான எல்லை பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளவும் பயன்படுத்தப்பட உள்ளது.

கடந்த 15  திகதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு,  மொத்தம் 31 ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வது குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தது. இதனடிப்படையில், 15 எம்.கியூ.9பீ ரக ஆளில்லா விமானங்கள் மற்றும் 16 ஸ்கை கார்டியன் ட்ரோன்களையும்  அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான முப்படைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த ஆளில்லா விமானங்கள் கடல்சார் கண்காணிப்பு மற்றும் கள விழிப்புணர்வுக்கு பொறுப்பாகும் அதே நேரத்தில் ஸ்கை கார்டியன் ட்ரோன்கள் நில எல்லைகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும்.

3 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த  திட்டத்தில், அமெரிக்க வெளிநாட்டு இராணுவ விற்பனை மூலமாகவோ அல்லது அரசாங்கத்துக்கு இடையேயான உறவுகள் மூலமாகவோ முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது ஆளில்லா விமானங்கள் கொள்வனவு திட்டம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.