மாலதி தமிழ்க் கலைக்கூட மெய்வல்லுநர் போட்டி 2023 டென்மார்க்

145 0

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டுதோறும் Jylland மற்றும் Fyn மாணவர்களை இணைத்து மெய்வல்லுநர் போட்டியை நடாத்தி வருகிறது. இவ்வாண்டுக்குரிய மெய்வல்லுநர் போட்டியானது கடந்த சனிக்கிழமை (17.06.2023) அன்று கேர்ணிங் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளாக கொடியேற்றம், இரண்டாம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், மாலதி தமிழ்கலைக்கூடப் பாடல், மாணவர்களின் அணிவகுப்பு, ஒளிச்சுடர் ஏற்றல், மேலாளர் உரை போன்றவற்றுடன் ஆரம்பமாகியது.

இதனையடுத்து ஆரம்பமாகிய தடகளப் போட்டிகளில் மாணவர்கள் விறுவிறுப்பாக கலந்து கொண்டனர். இவ்வாண்டும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டும் சிறப்பாக நடைபெற்றது. 5ஆண்கள் அணியும், 3 பெண்கள் அணியும் போட்டியிட்டனர். பெரியோர் முதல் இளையோர் வரை கிளித்தட்டு போட்டியில் கலந்து கொண்டு, கொட்டும் மழையிலும் விறுவிறுப்பாக விளையாடியதை காணக்கூடியதாக இருந்தது.

மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்படதோடு சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

இறுதியாக எமது தாரக மந்திரத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.
விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் எமது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்புக் கிண்ணம் பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு:

5 வயதிற்கான பிரிவில் (2018) மாயன் திவாகர் Struer
6 வயதிற்கான பிரிவில் (2017) திரிசாந் கிருஸ்ணா Ikast
7 வயதிற்கான பிரிவில் (2016) திசான் சந்திரகுமார் Herning
8 வயதிற்கான பிரிவில் (2015) சஞ்ஜித் றெமோன் Vejle
9 வயதிற்கான பிரிவில் (2014) வீரா சத்தியன் கோபிநேசன் Fredericia
10 வயதற்கான பிரிவில் (2013) யுவனேஸ் இரஜனிகாந் Aabenraa
11 வயதிற்கான பிரிவில் (2012) கிமோசன் சுபகரன் Herning
12 வயதிற்கான பிரிவில் (2011) நவீசன் நவரஞ்சன் Herning
13 வயதிற்கான பிரிவில் (2010) பிரனித் கிருபாகரன் Skjern
14 வயதிற்கான பிரிவில் (2009) ஹரிஸ் கணேசலிங்கம் Aabenraa
15 வயதிற்கான பிரிவில் (2008) அனயன் சிவரூபன் Randers, சய்கீதன் தவராசா Struer
16 வயதிற்கான பிரிவில் (2007) சனோஸ் ஜெயந்தன் Ikast
17-18 வயதிற்கான பிரிவில் (2006-2005) இந்துயன் பாலச்சந்திரன் Grindsted
19-20 வயதிற்கான பிரிவில் (2004-2003) யரன் ஜோஜ் Skjern

சிறப்புக் கிண்ணம் பெற்ற வீராங்கனைகளின் விபரம் வருமாறு:

5 வயதிற்கான பிரிவில் (2018) நிலா சிவகுமார் Ikast
6 வயதிற்கான பிரிவில் (2017) சிவன்யா வெங்கடேஸ் Ikast
7 வயதிற்கான பிரிவில் (2016) ரியானா ரஞ்சித் Herning
8 வயதிற்கான பிரிவில் (2015) நஜன்ஜா பிரதீபன் Ikast
9 வயதிற்கான பிரிவில் (2014) முத்துமலர் முத்துச்செல்வம் Ikast
10 வயதிற்கான பிரிவில் (2013) ஈழநிலா சசிகரன் Herning
11 வயதிற்கான பிரிவில் (2012) அஞ்சனா பத்மமுரளிதரன் Fredericia, றிகினா றமேஸ் Skjern
12 வயதிற்கான பிரிவில் (2011) சாதுர்யா செந்தில்குமரன் Grindsted
13 வயதிற்கான பிரிவில் (2010) நாவீர்யா கோபிநேசன் Fredericia
14 வயதிற்கான பிரிவில் (2009) நிதர்சனா மகேந்திரன் Grindsted
15 வயதிற்கான பிரிவில் (2008) றியானா ரமேஸ் Skjern
16 வயதிற்கான பிரிவில் (2007) தேனூயா உதயகுமாரன் Nyborg
17-18 வயதிற்கான பிரிவில் (2006-2005) அஸ்யா அல்பேட் சுரேஸ் Herning
19-20 வயதிற்கான பிரிவில் (2004-2003) மதுமிதா பரணீதரன் Grindsted