முல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்

276 0

முல்லை மருத்துவ சங்கத்தின்  ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்  ‎12-03-2017 அன்று முல்லை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி  s.சுதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் மருத்துவ முகாமில் முல்லை மருத்துவ சங்கத்தின் போசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இவ் மருத்துவ முகாமில் பொதுமருத்துவ நிபுனர்கள்,  குழந்தை நலன்மருத்துவ நிபுணர், பெண்நோய்கள்மகப்பேற்று மருத்துவநிபுனர், சத்திரசிகிச்சை,  எலும்புமுறிவு,நரம்பியல், தோல்வைத்தியநிபுனர், பற்சிகிச்சை, போன்ற வைத்திய நிபுணர்களால் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது.

இவ் மருத்துவ சேவையில் முத்தையன்கட்டு வலது கரை முத்தையன்கட்டு இடதுகரை  ஜீவநகர், முத்துவினாயகபுரம், கணேசபுரம்,சின்னச்சாளம்பன்,வித்தியாபுரம், ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, என பதினைந்துக்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300மேற்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.