20 ஆம் திகதி முதல் தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு!

341 0

சம்பள உயர்வு கோரிக்கை உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனை தாதியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் காமினி அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார துறையில் உள்ள ஏனைய பணியாளர்களுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.