அரசாங்கம் தனது அரசியல் எதிர்காலத்திற்காக இனமதமோதல்களை தூண்டுகின்றது

139 0
image
அரசாங்கம் தனது அரசியல் எதிர்காலத்திற்காக இனமதமோதல்களை தூண்டுகின்றது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்தகாலத்தை போல ஒரு தொலைக்காட்சி அலைவரிசையும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை 75 வருடங்களாக அழித்துள்ள தலைவர்களிற்காக சிங்கள தமிழ் முஸ்லீம் சமூகத்தி;ன் அடிமட்ட மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர் ஒன்றிணைந்துள்ளனர் என அனுராதபுரத்தில் தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக அச்சமடைந்துள்ள அரசாங்கம் அவர்களை பிரிக்க முயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் நாட்டை வடக்கு தெற்கு என பிரித்த ஆட்சியாளர்கள் தற்போது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக சமூகங்கள் மத்தியில் பிளவை உருவாக்க முயல்கின்றனர் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இவர்களின் நோக்கங்களிற்கு பலியாககூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.