சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிந்திரன் இன்று யாழ்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த அவரை 2 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் வெளியில் செல்வதற்கான அனுமதியும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே மோதல் இடம்பெற்றிருந்தது.
இச் சம்பவத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியிருந்தனர்.
இருந்த போதும் சிங்கள மாணவர் ஒருவர் கொழும்பு வைத்திய சாலையில் தொடர்ந்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சைபெற்றுவரும் சிங்கள மாணவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தன்னை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தாக்கியதாக பதிவு செய்துள்ளார்.
இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு பொலிஸார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனை கைது செய்யுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிசிந்திரன் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
சரணடைந்த சிசிதரன் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தோன்றி அவருக்கான பிணை விண்ணப்பத்தினை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
சிசிதரனுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்திருந்த போதும், நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் அவருக்கான பிணை அனுமதியினை வழங்கியிருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- சிங்கள மாணவர்களை தாக்கினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025