யாழ். சுப்பர் மார்க்கெட்டில் திருடர்கள் கைவரிசை

151 0

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட்டினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணம், குளிர்பான வகைகள் மற்றும் பால் மா பைக்கற்களை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த திருட்டுக் காட்சி அங்கிருந்த பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ள நிலையில், சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.