சொகுசு பேருந்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

152 0

சொகுசு பேருந்தில் கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதற்கமைய வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 1 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.

அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே கஞ்சாவினை கடத்திய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.