உற்பத்தி செய்யப்படும் உபரி மருந்துகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் அவதானம்

184 0
அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் தற்போது 96 அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாக பாராளுமன்றத்தின் சுகாதாரத் துறையின் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தெரிய வந்துள்ளது.நாட்டின் சுகாதாரத் துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, சுகாதாரம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது, ​​இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.2022ஆம் ஆண்டு அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் 9 புதிய வகை மருந்துகளை அறிவித்துள்ளதாகவும் மேலும் 20 புதிய வகை மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்தி செய்யப்படும் உபரி மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.மருந்து விநியோகத்தில் உள்ள சவால்கள், வெளிநாட்டு உதவி மூலம் மருந்துகளை பெறுவதில் ஏற்படும்
பிரச்சினைகள், மருந்துகளின் தரத்தை உறுதி செய்தல், மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம், மருந்து தட்டுப்பாடு, மனித வள பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.