அனுமதிப்பத்திரம் இன்றி எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டில் எகொட உயன பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழு பெரல்களில் 1,300 லீற்றருக்கும் அதிகமான எத்தனோலை எகொட உயன பிரதேசத்தில் லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

