அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தினர் கொழும்பில் போராட்டம்

166 0

அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (15)  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி வரையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், தமக்கான முறையான தீர்வுகளைப் பெற்று தருமாறு வலியுறுத்தியும்  பல்வேறு கோரிக்கை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.