வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

140 0

வாகன இறக்குமதிக்கு பல முறைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும் நாடு இன்னும் கடன் நெருக்கடியிலேயே இருக்கின்றது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், கடன் முறை மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது பரிசீலிக்கப்பட்டு செய்ய வேண்டிய விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.