மன்னாரில் திடீரென தீப்பற்றிய வாகனம்

61 0
மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை (14)  வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில், சாரதி மற்றும் உதவியாளர் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, இசைமாலைத்தாழ்வு பகுதியில், வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கிப் பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி திடீரென தீப்பற்றியது.

வாகன சாரதி மற்றும் உதவியாளர் துரித கதியில் வாகனத்தில் இருந்து வெளியேறி வாகனத்தில் இருந்த பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவதும் தீப் பரவல் ஏற்பட்டு, முழுமையாக வாகனம் எரிந்து நாசமாகியுள்ளது. சாரதியும் உதவியாளரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.