ஐ.நா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்

251 0

இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையால் 2015 ஐப்பசி  1ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஆணைக்குழவின் 30/1 தீர்மானத்தின் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐ.நா மனித உரிமைகள் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி மேற்பார்வை செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறையின் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும்வண்ணமாக சர்வதேசப் பொறிமுறைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதிசெய்ய வேண்டும்,

மேற்படி தீர்மானங்களுக்கு ஈபிஆர் எல் எப் இணங்கவில்லை என நடேசு சிவசக்தி (பா.உ) தெரிவித்தார்.