16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்குமா?: தீபா வேதனை

234 0

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த தீபா, 16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்கும் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்நிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இரும்புப் பெண்மணி ஐரோம் ஷர்மிளா 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து போராடி வந்த நிலையில், புதுக்கட்சி துவங்கி இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தவுபால் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.

ஐரோம் ஷர்மிளா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக, எந்த பகுதியாக இருந்தாலும், சைக்கிளில் சென்றே அவர் மக்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், தபுபாலில் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் 15,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐரோம் 85 வாக்குகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஐரோம் ஷர்மிளா குராய் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதியின் நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.

ஐரோம் ஷர்மிளா தோல்வி குறித்து எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தங்களது நலனுக்காக தான் போராடினார் என்பது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்த மக்கள் தந்த தோல்வியால் வருந்தப்போவது இந்த இரும்புப்பெண்மணி இல்லை.

இவரை தோற்கடித்தற்காக ஒவ்வொரு நாளும் மக்கள் வருந்துவார்கள்.

இவ்வாறு தீபா பதிவிட்டுள்ளார்.

பின்னர் அதை நீக்கி விட்டு

16 வருடங்கள் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் பெறலாம்.

    16 வருடங்கள் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள்

பெறலாம்.#இந்தியஜனநாயகம்#ஐரோம்_சர்மிளா#இந்தியாpic.twitter.com/IzMQM30gIC
    — J.Deepa (@JDeepaOfficial) March 11, 2017