சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் தெஹிம்பிவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் அலபத, நிவித்திகல, கலவான, எஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

