இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு

174 0

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.