ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 23 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது!

224 0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தாம் குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த முதலாவது A330-200 விமானத்தை 23 வருட சேவையின் பின்னர் பிரான்ஸிடம் ஒப்படைக்கத்  தயாராக உள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த விமானங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்றிருந்தது.

ஏ300-200 பிரிவின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொள்வனவு செய்த முதல் விமானம் இதுவாகும். இதில் 18 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 251 பொருளாதார வகுப்பு இருக்கைகள் உள்ளன.

லண்டன் ஹீத்ரோ, ஜேர்மனியின் பிராங்பேர்ட், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், ரஷ்யாவின் மொஸ்கோ போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை பயன்படுத்தியதுடன், இதுவரை இந்த விமானம் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.