சவப்பெட்டிக்குள் விழித்தெழுந்த வயோதிபப் பெண்

170 0

இறந்துவிட்டார் எனத் தீர்மானிக்கப்பட்டு, சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர் சவப்பெட்டிக்குள் விழித்தெழுந்த சம்பவம் ஈக்வடோரில் இடம்பெற்றுள்ளது.

76 வயதான பெல்லா மொன்டோயா எனும் பெண்ணே இவ்வாறு சவப்பெட்டிக்குள் விழித்தெழுந்துள்ளார்.

அவரின் மகன் கில்பர்ட் பெல்பேரான் இது தொடர்பாக கூறுகையில், பாபாஹோயோ நகரிலுள்ள மர்ட்டின் இகாஸா பொது வைத்தியசாலையில் தனது தாயார் இறந்துவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை அறவிக்கப்பட்டதாகவும், இதற்கான மரணச் சான்றிதழையும் அதிகாரிகள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட பின்னர் அப்பெண் தனது கைகளால் சவப்பெட்டியை தட்டினாரென பெல்பேரான தெரிவித்துள்ளார்.

அதன்பின் சவப்பெட்டியை திறந்தபோது அவர் சுவாசித்துக்கொண்‍டிருந்தார்.

இப்பெண் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தை செயற்படுத்துவதற்கான சிகிச்சைகளுக்கு பிரதிபலிப்பு ஏற்படாத நிலையில், அவர் இறந்துவிட்டார் என கடமையிலிருந்த மருத்துவர் அறிவித்துள்ளார் என ஈக்வடோர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.