மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரைக் கைது செய்ய தெமட்டகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்குச் சொந்தமான கெப் வண்டியொன்று நிதி நிறுவன உரிமையாளரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் கொழும்பு ரோயல் கார்டனுக்கு அருகில் விடப்பட்டிருந்த நிலையில் அவர் தெமட்டகொடை பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

