போலி நிறுவனங்களை பதிவு செய்து ஆறு கோடி ரூபாய் மோசடி – நைஜீரிய நாட்டவர் கைது

276 0

பிரபலமான தொழில் நிறுவனங்களின் பெயரில் இலங்கையில் போலி நிறுவனங்களை பதிவு செய்து அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நைஜீரிய நாட்டவர் பிரபலமான தொழில் நிறுவனங்களில் ஆவனங்களை திருடி அதன் மூலம் மோசடிகளை மேற்கெண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் பணிப்பாளரால் இதன் முக்கிய முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாணந்துறை பிரதேசத்தில் வசித்துவந்த இலங்கையர் ஒருவரும் இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த போலி நிறுவனங்களுக்கு பலரை பணிப்பாளர்களாக நியமித்துள்ளதுடன் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அதன் பின்னர் சர்வதேச நிறுவனங்களின் கனிணி தரவுகளை திருடியுள்ளனர்.

இந்த தரவுகளை பயன்படுத்தி அந்த நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இலங்கையிலுள்ள போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது