6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்புக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல்

438 0

A18CD3F6-719B-4F07-88C3-4B2BD7DECFF2_L_styvpfபிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அவசரநிலை சட்டத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டித்து அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அவசரநிலை சட்டத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டித்து அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவசரநிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து, நீட்டிக்கப்பட்டுவந்த இந்த அவசரநிலை சட்டக் காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின்போது நீஸ் நகரில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அந்நாட்டில் அமலில் இருந்துவரும் அவசரநிலை சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அறிவித்திருந்தார்.

அவரது அறிவிப்புக்கு இன்று பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதிவரை மேலும் ஆறுமாத காலத்துக்கு நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் அமலில் இருக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த அவசரநிலை அமலில் இருக்கும் காலகட்டத்தில் சந்தேகத்துக்குரிய இடங்களில் நுழைந்து சோதனை நடத்தவும், தேவைப்படுவோரை கைது செய்யவும், வீட்டுக் காவலில் அடைத்து வைக்கவும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக அவசரநிலை சட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஆறுமாத கால நீட்டிப்புக்கு பாராளுமன்ற கீழ்சபை தற்போது ஒப்புதல் அளித்திருந்தாலும், மேல்சபை உறுப்பினர்களின் ஒப்புதலையும் பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.