கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

232 0

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெறுகின்றது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று ஆரம்பமாகி, நாளை திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்புப் பிரிவினருடன் சர்வதேச கடற்பரப்பு வரை வருகை தரும் பக்தர்களுக்கு அங்கிருந்து இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்குகின்றது.

நாட்டிலிருந்து கச்சத்தீவிற்கு செல்லும் பக்தர்களுக்காக விசேட படகு சேவை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.