வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்-  ரணில்

322 0

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே பிரதமர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்ததாக, கலந்துரையாடலில் பங்கேற்ற வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 13 ஆவது நாளாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்னால் தொடரும் நிலையில், மட்டக்களப்பிலுள்ள 1600 க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரும் போராட்டம் 19 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இதேவேளை. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பட்டதாரிகளாக வெளியேறியவர்களுக்கு இதுவரை  நியமனம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.