தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும்…(காணொளி)

275 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.

ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமானது.

விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியா இரண்டாம் குறுக்குத்தொருவில் உள்ள விடுதி ஒன்றில் இக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளருளருக்கு அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, கூட்டம் ஆரம்பமாகியதும் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டு மூடிய மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கும் விவகாரம், காணிவிவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருவதுடன் அண்மைக்காலமாக கூட்டமைப்பு உறுப்பினர்கள், பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெறும் இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபன், யோகேஸ்வரன், கோடிஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம், ஐங்கரநேசன், குருகுலராஜா, மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், கோவிந்தன் கருணாகரன், கஜதீபன், இந்திரராஜா, தியாகராசா, மயூரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.