இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு(காணொளி)

415 0

இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இரறால் பிடிப்பதற்காக சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி கண்ணகி நகரைச் சேர்ந்த 32 வயதுடைய செ.செல்வகுமார் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.