பலஸ்தீன ஜனாதிபதிக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு

251 0

பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது தொலைபேசி உரையாடலின்போதே ட்ரம்ப் இவ்வாறு அழைப்பு விடுத்ததாக பலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் அரிசியல் நெருக்கடி நிலைமையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து கலந்துரையாட பலஸ்தீன ஜனாதிபதிக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதார்.

பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் குடியேற்றங்களை அமைத்து வருவதாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.