பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம என்பவர் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மேல் மாகாணத்தின் மீகொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 62 வயதுடைய நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டிலிருந்து வல்பிட்ட கெமுனு மாவத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் நான்கு முறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை,வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

