சிறிய பிரச்சினையை பெரிது படுத்தும் தமிழக அரசியல் வாதிகள்! நாமல்

231 0

இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்த விவகாரம் கடந்தசில நாட்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில்,இந்த பிரச்சினை தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ இந்திய ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த பேட்டியின் போது இடம்பெற்ற உரையாடல்கள் பின்வருமாறு,

கேள்வி – இலங்கை கடற்படையினர் இந்திய மீனவரை சுட்டுக் கொலைசெய்துள்ளனர்… இது நியாயமா?இது தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்(நாமல்)- இலங்கை கடற்படையினரிடம் விசாரணை மேற்கொண்ட போது தாங்கள்சுடவில்லை என்றே அவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இது போன்றகுற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டதாகஆதாரம் எதுவும் இல்லை.இருப்பினும்,இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பித்துஉண்மையை கண்டறியும் என தான் நம்புவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி- தமிழக அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதைநிறுத்திக் கொள்ள வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளீர்கள்? யாரைப் பற்றிகுறிப்பிட்டுள்ளீர்கள்?

பதில்(நாமல்)- கடந்த சில வருடங்களாகவே இலங்கையில் ஒரு சிறிய பிரச்சினைஏற்பட்டால் தமிழக அரசியல்வாதிகள் அதனை பெரிதுபடுத்துகின்றார்கள்.

நான் யாரையும் எந்தவொரு கட்சியையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. இந்தபோக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கோ இலங்கை மக்களுக்கோ எந்த நன்மையும்கிடைக்கப்பெற போவதில்லை என நாமல் தெரிவித்துள்ளார்.

கேள்வி- இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்பதன் மூலம் மீனவர் பிரச்சினைக்குதீர்வு கிட்டும் என நம்புகின்றீர்களா?

மீனவர் பிரச்சினை, கச்சதீவு பிரச்சினை இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள்…கச்சதீவை மீட்பதன் மூலம் மீனவர் பிரச்சினை தீராது என்பது எனதுகருத்து.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதேநேரம் மீன்பிடியில் புதிய தொழில்நுட்பத்தை மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.