உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கைக்கு ஆன்மீக விஜயம் மேற்கொண்ட சுவாமிக்கு மட்டக்களப்பில் இருந்துவிடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து அவர் மட்டக்களப்புக்கும் விஜயம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வும் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது.
மனிதன் மனிதனாக வாழ சமயம் கூறும் வழிமுறைகள் தொடர்பில் இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதன்போது சுவாமிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சுவாமியின் சர்வதேச கிளை உறுப்பினர்களினால் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் உணர்வினால் இறைவினை வழிபடும் வகையிலான ஆன்மீக பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இதன்போது சுவாமி சரவண பாபாவின் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு ஆசிர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

