மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும்…..(காணொளி)

369 0

மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்;டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப கல்வி பிரிவு மற்றும் கல்வி வள ஆலோசனை நிலையம் என்பனவற்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், ஞா.கிருணபிள்ளை, பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் தொழில்நுட்ப கல்வியின் வளர்ச்சியை நோக்காக கொண்டும், தொழில் தகைமையினை நோக்காக கொண்டும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், போரதீவுப்பற்று வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப கல்வி பிரிவு மற்றும் கல்வி வள ஆலோசனை நிலையம் என்பன அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.