வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சியில் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 19 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்று வரையும் கிடைக்கவில்லை என தெரிவித்து, தங்களின் நீதிக்கான போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

