சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி (காணொளி)

301 0

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் காலை ஆரம்பமான பேரணி;, காலை 8:00 மணியளவில் சாவகச்சேரியை சென்றடைந்தது.

சாவகச்சேரி நகரில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் மருத்துவர் அருளானந்தம் தலைமையில் இலவச மருத்துவ பரிசோதனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் லயன்ஸ்கழகத்தின் யாழ்.மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் திஜாகராசா மற்றும் உறுப்பினர்கள் சாவகச்சேரி வர்த்தக சங்கத்தினர் கலந்துகொண்டனர்