நிதியமைச்சராக சம்பிக்க ரணவக்க ?

229 0

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார்.

நிதியமைச்சு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிக்கவுக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்பட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன