எரிபொருள் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை சம்மாந்தறை நிந்தவூர் அட்டாளைச்சேனை ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு இன்று காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் விலைக்குறைப்பு எரிபொருள்களுக்கு ஏற்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

