இலங்கையின் இறைமை, சமூக பொருளாதார அபிவிருத்திக்காக சீனா எப்போதும் துணை நிற்கும்

61 0

பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும்  துறைமுக உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற பல துறைகளில் இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்திற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவை அளித்து வருகிறது. பல தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை ஒரே கொள்கையை கடைப்பிடிப்பதாக பிரதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சமய உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இலங்கை பௌத்த சங்கங்களுடன் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போது சீனா வழங்கிய உதவியை பாராட்டினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய்களின் போது இலங்கைக்கு தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை சீனா வழங்கியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

சீனாவின் யுனான் மாகாண ஆளுநரின் அண்மைய விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள கலந்துரையாடல்கள் விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மல்வத்துஓயா திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் பிரதேசங்களில் விவசாயத் திட்டங்களில் சீனா முதலீடு செய்ய முடியும் எனவும், சீனாவிற்கு மரக்கறி மற்றும் பழப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சீன பிரதி அமைச்சர் பத்தாயிரம் பாடசாலை பைகள், காகிதாதிகள், சீருடைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிவைத்தார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷென் ஹொங் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.