சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றையவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் வர்த்தக நோக்கத்துக்காக பதுளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வேன் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்குப் பெற்று வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், வாகனங்களுக்கான வாடகைத் தொகையை முதல் சில மாதங்களுக்கு செலுத்தி வந்துள்ளனர்.
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வாகனங்களுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டு தங்களது கைத்தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே சந்தேக நபர்களை தாம் வாடகைக்குப் பெற்ற வாகனங்களை அடகு வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று அவற்றை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.