
இந்த விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தல பிரதேசத்தில் வசிக்கும் 31 மற்றும் 32 வயதுடைய இருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் மழை காரணமாக அருகில் உள்ள மரத்திற்கு அடியில் சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.