இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இல்லத்தின் மீது மர்ம கார் மோதல்- ஒருவர் கைது

61 0

இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த முதலாவது கேட் நுழைவு வாயிலில் மர்ம கார் ஒன்று மோதியது. இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரை ஓட்டி வந்தது 50 வயது மதிக்கதக்கவர் என்பது தெரியவந்தது.

அவரது தலை முழுவதும் நரைத்து இருந்தது. இது தொடர்பாக ஒரு வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஏதேச்சையாக நடந்த விபத்தா? அல்லது சதி வேலையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.