உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்

13 0

2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:

  • ஜிம்பாப்வே
  • வெனிசுலா
  • சிரியா
  • லெபனான்
  • சூடான்
  • அர்ஜெண்டினா
  • ஏமன்
  • உக்ரைன்
  • கியூபா
  • துருக்கி

வேலையின்மை, பணவீக்கம் காரணமாகவே மேற்கூறிய நாடுகள் துயர் நிலையில் இருப்பதாகவும் அவரது பட்டியல் கூறுகிறது