இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் மற்றும் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு

86 0

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் டாக்டர்.எலிஸ்கா ஜிகோவா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சம்பவம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகமான சௌமிய பவனில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் மலையகம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்றன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் எம்.பி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.